கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (35) இவர் மனைவி சந்திரலேகா (30). தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 13-ம் திகதி வீட்டின் பின்புறம் உள்ள ஏரியில் சக்திவேல் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சக்திவேலின் தாய் அலமேலு பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அதில் சக்திவேலை சந்திரலேக தனது கள்ளக்காதலன் மதிவாணனுடன் (32) சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும், அதற்கு சக்திவேலின் மாமியார் அஞ்சலை உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது

இதையடுத்து மூவரையும் பொலிசார் கைது செய்தார்கள். சந்திரலேகா அளித்துள்ள வாக்குமூலத்தில், என தாய் அஞ்சலையை பார்ப்பதற்காக மதிவாணன் அடிக்கடி வீட்டுக்கு வந்த நிலையில் எங்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதையறிந்த சக்திவேல் என்னை கண்டித்ததால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நான் மதிவாணன் மற்றும் அஞ்சலை உதவியுடன் என் கணவர் சக்திவேலை கழுத்தை நெரித்து கொன்றேன்.

பின்னர் உடலை ஏரியில் வீசிவிட்டு, தண்ணீரில் மூழ்கி அவர் இறந்ததாக நாடகமாடினோம், ஆனால் பொலிஸ் விசாரணையில் சிக்கி கொண்டோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்