கூலித் தொழிலாளியின் உயிரை பறித்த இட்லி

Report Print Kabilan in இந்தியா

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு உயிரை விட்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளுடன், இட்லி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றுள்ளது.

விதிமுறைகளின்படி குறைந்த நிமிடங்களில் அதிகமான இட்லியை யார் சாப்பிடுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர்.

இதில் கலந்து கொண்ட சின்னத்தம்பி, ஆர்வமிகுதியில் மளமளவென இட்லிகளை சாப்பிட்டார், தொண்டை அடைத்து கொண்டதால் விக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அனைவரும் பதறிப்போனதுடன் தண்ணீரை குடி என கூறியுள்ளனர், தண்ணீரை குடித்த அடுத்த நொடியே சின்னத்தம்பியின் மூக்கில் ஏறி இருக்கிறது.

தொடர்ந்து தும்மல் ஏற்பட்டது, இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

உடனடியாக பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்