நடிகை தேவயானியின் தந்தை மரணம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல திரைப்பட நடிகை தேவயானியின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் (73) இன்று அதிகாலை காலமானார்.

அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தேவயானி, இவரது தம்பி நகுலும் பிரபல நடிகராக திகழ்கிறார்.

இந்நிலையில் தேவயானியின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் சென்னை தியாகராய நகர் வீட்டில் இன்று காலமானார்.

இன்று மதியம் 1.30 மணி முதல் 2 மணிக்குள் அவரின் உடல் தகனம் செய்யப்படவுள்ள நிலையில் தற்போது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்