சாலையில் பிச்சையெடுக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சாலையில் பிச்சையெடுக்கும் கோடீஸ்வரரை பொலிசார் மீட்டு அவர் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள சாலையில் வயதானவர் ஒருவர் பிச்சையெடுத்தபடி இருந்துள்ளார்.

அவரை சமீபத்தில் பார்த்த பிரிஜிமோகன் என்ற காவலர் அருகில் சென்று அவர் குறித்த தகவலை கேட்டுள்ளார்.

பின்னர் தட்டுதடுமாறி தனது பெயர் சிவச்சன் (60) என கூறிய முதியவர், பச்வாரா பகுதியில் தனது வீடு உள்ளதாக கூறியுள்ளார்.

சிவச்சனால் சரியாக பேச மற்றும் எழுந்து நடக்கமுடியாத நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பிச்சையெடுத்து வந்துள்ளார்.

சிவச்சன் கூறிய பகுதியில் சென்று பொலிசார் விசாரித்த போது அவர் மிக பெரிய கோடீஸ்வரர் என தெரியவந்தது.

அதே நேரத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

சிவச்சனுக்கு 70 ஏக்கர் நிலமும், ஆறு கடைகளும் சொந்தமாக உள்ளது. அவர் குடும்பத்தை கண்டுப்பிடித்த பொலிசார் அவர்களிடம் சிவச்சனை ஒப்படைத்தனர்.

சிவச்சன் சகோதரர் ராமன் கூறுகையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் தசரா திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றோம்.

அங்கு சிவச்சன் தொலைந்து போய்விட்டார். பொலிசார் உதவியுடன் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

தற்போது அவர் திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

சிவச்சனுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்