ஜல்லிக்கட்டு காளைக்காக தமிழச்சியின் தியாகம்

Report Print Balamanuvelan in இந்தியா

குடும்பப் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக் காளையை வளர்ப்பதற்காக ஒரு பெண் தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த Selvarani Kanagarasu தினசரி சம்பளத்திற்கு கூலி வேலை செய்பவர்.

அவரது தந்தையாரும் பாட்டனாரும் பாரம்பரிய ஜல்லிக்கட்டில் பங்கெடுக்கும் காளைகளை வளர்த்தவர்கள்.

அவர்களுக்குப்பின் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர அவரது மகன்களுக்கு நேரமில்லை. எனவே தனது முன்னோர்களின் பாரம்பரியத்தைக் காக்க Selvarani Kanagarasu முடிவெடுத்தார். இதற்காக அவர் திருமணம் செய்யாமலிருக்கவும் முடிவு செய்தார்.

இன்று அவர் வளர்த்துவரும் காளைக்கு 18 வயதாகிறது. ராமு என்று பெயரிடப்பட்ட அந்தக் காளை இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்றுள்ளது.

அது கொண்டுவரும் பரிசுகள் எனக்கு முக்கியமில்லை, எனது குடும்பத்திற்கு அது கொண்டுவரும் கௌரவம்தான் முக்கியம் என்று கூறும் Selvarani, ஒரு நாளைக்கு 200 ரூபாய் (£2.28; $3.15) தான் சம்பாதிக்கிறார். அந்த சம்பாத்தியத்திலும் பெரும்பங்கு காளையின் உணவுக்குதான் செல்லுகிறது.

சாதாரண காளைகளைப்போல் அல்லாமல், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு வைக்கோல், தவிடு தவிர தேங்காய், பேரீச்சம்பழம், வாழைப்பழம், எள், புண்ணாக்கு, அரிசி மற்றும் பிற தானியங்கள் ஆகியவையும் உணவாகக் கொடுக்கப்பட வேண்டும்.

திருமணத்தைவிட குடும்பப்பாரம்பரியம் முக்கியம் என்று முடிவெடுத்த Selvaraniக்கு இன்று 48 வயதாகிறது.

தனக்குப்பின் காளையைப் பார்த்துக்கொள்ள தனது உறவினரில் ஒரு பெண்ணைத் தயார் செய்து வருகிறாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்