தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த நெல்லை சம்பவம்: இது காரணம் இல்லை என பொலிசார் அறிக்கை

Report Print Santhan in இந்தியா
371Shares
371Shares
ibctamil.com

தமிழகத்தில் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு கந்துவட்டிக் கொடுமை காரணம் இல்லை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர் மனைவி சுப்புலெட்சுமி (25), மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2) ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்திற்கு நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறையினரை விமர்சித்து கார்டூனிஸ்ட் பாலா வரைந்த கார்ட்டூன் சர்ச்சையை கிளப்பியது.

அந்த கார்ட்டூனும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க பொலிசார் சிறப்பு குழுவை அமைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த வேளையில், பொலிசார் முழுமையான விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அறிக்கையில், இசக்கிமுத்து கடன் கொடுத்தவர்கள் மீது கந்துவட்டி கொடுமை என்ற பழியைப் போட்டுவிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொண்டுவிட்டார். இதனால், இந்த தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்