சுற்றுலா சென்ற போது நடந்த விபரீத சம்பவம்: 40 பள்ளிக் குழந்தைகளுடன் மூழ்கிய படகு

Report Print Balamanuvelan in இந்தியா
297Shares
297Shares
ibctamil.com

மகாராஷ்டிராவின் தகானு கடற்கரையில், 40 பள்ளிக் குழந்தைகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் சுற்றுலா வந்த 40 பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு, கடலில் இருந்து 3.7 கி.மீ தூரத்தில் சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்தது.

32 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், இந்த விபத்தில் இதுவரையில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் Ambedkar Nagar பகுதியின் Masauli ஐச் சேர்ந்த Sonal Bhagwan Surati மற்றும் Janhavi Harish Surati என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மற்றும் கடலோரக் காவல் படையின் படகுகள் உதவியுடன் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச் சென்றதே விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்