பாலியல் குற்றங்களால் திணறும் இந்திய தலைநகர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா
75Shares
75Shares
ibctamil.com

இந்திய தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு ஐந்து பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதில், பெரும்பாலோனார் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என டெல்லி காவல் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2016ஆம் ஆண்டில் 4,035 பாலியல் வன்முறை வழக்குகளும், 2017ஆம் ஆண்டில் 3,273 பாலியல் வன்முறை வழக்குகளும் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2016ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் பாலியல் வன்முறைகள் குறைந்துள்ளதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் 894 ஆக இருந்த பெண்களை கிண்டல் செய்தல் வழக்குகள் 2017ஆம் ஆண்டு 621 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 92 சதவிகித பாலியல் பலாத்கார வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் 86 சதவிகித வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டது.

பெரும்பாலான பாலியல் வன்முறைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருப்பதாக சுட்டிக்காட்டும் குறித்த ஆய்வறிக்கை, அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

அதில், 38.99 சதவிகிதம் - நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள், 19.08 சதவிகிதம் - அண்டை வீட்டுக்காரர்கள், 14.20 சதவிகிதம்- உறவுமுறையினர் மற்றும் 3.86 சதவிகிதம் - முதலாளிகள் மற்றும் சக ஊழியர்களால், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி பொலிஸ் ஆணையர் அமுலியா பட்நாயக் கூறுகையில், பெண்களின் பாதுகாப்பு அவசியம் என்பதால் அதற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இடங்களில் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவது, பெண் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துவிட்டன.

குற்ற செயல்களுக்கு அடிப்படை காரணமாக அமையும் பொது இடங்களில் மது அருந்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் 23,094 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்