உல்லாசமாக இருந்த பொலிஸ் அதிகாரியை சிக்கவைத்த அந்த வீடியோ

Report Print Harishan in இந்தியா
514Shares
514Shares
ibctamil.com

தமிழகத்தில் லாட்ஜ் உரிமையாளரை ஏமாற்றி வந்த பொலிஸ் உயர் அதிகாரி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தருமபுரியில் உள்ள அந்த பிரபலமான விடுதியில் தான் இரண்டு வருடங்களுக்கு முன் விருந்தினராக தங்க வந்துள்ளார் தருமபுரி டி.எஸ்.பி-யான முத்துமாணிக்கம்.

அங்கு அறை எண் 315-இல் தங்கி வந்த அவர், விடுதி பிடித்திருந்ததால் அங்கேயே தங்கிவிட்டதால் அனைவருக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் விடுதி மேலாளர், 'சார்.. நீங்க தொடர்ந்து தங்குவதாக இருந்தால் வேற இடம் பாருங்கள்' என்று கூறியுள்ளார். 'வேறு இடம் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்' என்று கூறியே இரண்டு வருடத்தை கடத்தி வந்துள்ளார் டி.எஸ்.பி முத்துமாணிக்கம்.

அங்கு பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வந்த டி.எஸ்.பி-யால் விடுதியின் பெயர் கெடுவதக் கண்டு மனமுடைந்த விடுதியின் உரிமையாளார், டி.எஸ்.பி-யின் அறைக்கு பெண்கள் வந்து செல்லும் வீடியோ காட்சிகளுடன் மாவட்ட எஸ்.பி பண்டிட் கங்காதரிடம் ஆதாரத்துடன் முறையிட்டுள்ளார்.

கடுப்பான எஸ்.பி. பண்டிட், விடுதியை காலி செய்யும்படி முத்துமாணிக்கத்துக்கு மெமோ அனுப்பியும் அவர் காலிசெய்யாமல் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இதுகுறித்து சக பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், ''எங்கள் அலுவலகத்தில் நேர்மையான அதிகாரியாக நடந்துகொள்ளும் டி.எஸ்.பி, பெண் காவலர்களிடம் அது சரியில்ல, இது சரியில்ல தலையில் தொப்பிகூட ஒழுங்கா போட்டுக்கொண்டு சல்யூட் அடிக்கத் தெரியாதா? இதைத்தான் உங்களுக்கு ட்ரெய்னிங்ல சொல்லிக்கொடுத்தார்களா? என்று அதிகாரம் காட்டுவார்.

அவரது அறைக்குச் செல்லும் பெண்களின் வீடியோவைப் பார்த்த பிறகுதான், அவரின் லட்சணம்புரிகிறது. வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது. இதையெல்லாம் உயர் அதிகாரிகள் உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?'' என்கின்றனர்.

ஆனால் முத்துமாணிக்கம் கூறுகையில், நான் விடுதியில் தங்கியிருப்பது உண்மைதான். மற்றபடி நீங்கள் சொல்வது தவறான செய்தி என கூறி சமாளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்