அரசியல் கட்சி தொடங்க தாமதம் ஏன்? கமல்ஹாசனின் விளக்கம் இதுதான்

Report Print Harishan in இந்தியா
129Shares
129Shares
ibctamil.com

அரசியல் கட்சி தொடங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் வருகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் ரஜினியும் நேரடி அரசியலில் களம் இறங்க உள்ளதாக கடந்த டிசம்பர் 31-ஆம் திகதி அறிவித்தார்.

அவரது அறிவிப்பை வரவேற்று கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தொடர்ந்து சில மாதங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து பிரபல தமிழ் இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த வாரம் வெளியான கட்டுரையில், வழக்கமான பாரம்பரியத்தில் வரும் அரசியல்வாதியாக தொடர எனக்கு விருப்பம் இல்லை. அப்படி ஒரு தலைமையின் கீழ் இன்றைய தலைமுறை இளைஞர்கள் ஒன்றிணைய தயாராகவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் பயணத்திற்கு நான் தாமதப்படுத்துவது சந்தேகத்தினாலோ, பயத்தினாலோ அல்ல. கடலே ஆர்ப்பரித்தாலும் பாம்பன் பாலம் நிலைத்து நிற்கவில்லையா? அது மாதிரி கட்ட வேண்டும்.

அதற்கு எத்தனை நாட்கள் என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள். மறதி தான் மக்களை ஏமாற்றுபவர்களின் மூலதனம், வல்லாரை வஸ்துக்களை சாப்பிட்டாவது அரசியல் நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என மக்களை கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

கழுத்தளவு தண்ணீரில் உயிருக்குப் போராடி கொண்டிருந்தவர்களே டிசம்பர் மழையை மறந்துவிட்டார்களே என்றும், செய்திகளைப் பொழுதுபோக்காகக் கடந்துவிடாமல், அதன்பின் உள்ள அரசியலைப் பகுத்தறிந்து பழகுங்கள் என கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சி அறிவுப்பு குறித்து அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்