சசிகலாவின் கணவர் நீதிமன்றத்தில் சரண்

Report Print Fathima Fathima in இந்தியா
191Shares
191Shares
ibctamil.com

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் எம்.நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 1994-ம் ஆண்டு புதிய லெக்சஸ் எனப்படும் வெளிநாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்ததில் அரசுக்கு 1.62 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நடராஜன், டிடிவி.தினகரன் சகோதரர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 நபர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில் உடல்நில குறைவால் சிறை தண்டனையில் இருந்து ஜாமீன் வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் நடராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் அந்த தீர்ப்பின் நகலை கோர்ட்டில் சம்ர்ப்பிக்கவில்லை என கூறி, நடராஜனுக்கு கடந்த 7-ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஜாமீன் கோரி குற்றவாளிகள் 4 பேரும் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 25 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி, கோர்ட்டில் சரணடைந்து பின்னர் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

அவ்வாறு பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெறுவதற்காக சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் நடராஜனுக்கு சென்னையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்