டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் அமெரிக்க ஜனாதிபதி

Report Print Arbin Arbin in இந்தியா
135Shares
135Shares
ibctamil.com

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகனுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம், ரூ.1,200 கோடி முதலீட்டில் டெல்லி அருகே குர்கானில் நவீன வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பை கட்டுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மகன் ஜூனியர் டொனால்ட் டிரம்ப் தமது தந்தை ஜனாதிபதி பொறுப்பேற்ற பிறகு, அவரது தொழில் சாம்ராஜ்யத்தின் துணை தலைவராக இருந்து வழி நடத்தி வருகிறார்.

இந்தியாவில் இவருக்கு எம்3எம் இந்தியா, டிரிபிகா டெவலப்பர்ஸ் என்ற கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. இவை ஏற்கனவே புனே, மும்பை, கொல்கத்தாவில் அதிநவீன அடுக்குமாடி கட்டிடங்களை கட்டியுள்ளன.

இந்நிலையில், எம்3எம் நிறுவனம் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் ரூ.1,200 கோடி செலவில் அதிநவீன வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்ட உள்ளது.

இதில், 250 குடியிருப்புகள் இடம் பெறுகின்றன. இதற்கான கட்டுமான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த குடியிருப்புகள் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எம்3எம் இந்தியா நிறுவன இயக்குனர் பங்கஜ் பன்சால் கூறுகையில், 50 தளங்களை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு 5 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்