திருமண கொண்டாட்டத்தின்போது பயங்கரம்: வாளுக்கு இரையான சிறுவன்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் திருமண விழா ஒன்றில் நடந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவன் ஒருவர் வாளுக்கு உயிர்விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் இஸ்லாமியர்களின் திருமண விழா ஒன்றில் மணமகனின் விருந்து நிகழ்ச்சியில் வாள் மற்றும் குறுங்கத்தியை பயன்படுத்தி பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற 15 வயது சிறுவன் ஒருவன் நடன நிகழ்ச்சியில் தமது வாளாலையே குத்துப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து ஹமீது என்ற அந்த இளைஞரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டுமின்றி அந்த விழாவில் பங்கேற்ற ஜுனைத் என்ற இளைஞரை இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் குறித்த இளைஞரை கைது செய்ததன் காரணம் தொடர்பில் பொலிசார் விளக்கமளிக்க மறுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்