பேரவையில் இருந்து ராஜா நீக்கம்: தீபா அறிக்கை வெளியீடு

Report Print Kabilan in இந்தியா

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா, தனது நண்பரும், கார் ஓட்டுநருமான ராஜாவை ஜெ.தீபா பேரவையில் இருந்து நீக்கியுள்ளார்.

இதுகுறித்து ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரவையின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை, ராஜா மீறியுள்ளார்.

தொடர்ந்து பேரவைக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில், அவர் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஏ.வி.ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

ராஜாவுடன் பேரவையின் கட்டுப்பாட்டை மீறி யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்’ என தெரிவித்துள்ளார். இதனை தீபா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீபாவின் இந்த அறிக்கைக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தீபாவின் நண்பரும், கார் ஓட்டுநருமான ராஜாவினால் தீபாவிற்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், பேரவையில் இவருக்குப் பதவி வழங்கியதாலேயே, தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சி துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்