அமைச்சரை கிண்டலடித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்: சட்டமன்ற வளாகத்தில் சிரிப்பு வெடி!

Report Print Harishan in இந்தியா

தமிழக சட்டமன்ற வளாகத்தில் அதிமுக அமைச்சரை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கிண்டல் செய்தது அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பின் தமிழகத்தின் சட்டமன்றம் இன்று காலை ஆளுநர் தலைமையில் கூடியது.

ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிடிவி.தினகரன் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு இன்று வருகை தர இருந்ததால் அவரை அழைத்துச் செல்ல அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வளாகத்தின் முன்னர் காத்திருந்தனர்.

அப்போது இறுதியாக வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை கண்டு கொள்ளாமல் அவர்களை கடந்து வேகமாக நடந்து வந்துள்ளார்.

அமைச்சரை கவனித்த வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள், ”ஹலோ மிஸ்டர் தெர்மாகோல்” என அழைத்தபடி கிண்டல் செய்துள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செல்லூர் ராஜூ, காதில் வாங்காதது போல் வேகமாக சட்டை கையை மடித்தபடி நடந்து சென்றது அங்குள்ள அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

முன்னதாக கடந்தாண்டு வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக தெர்மாக்கோல் கொண்டு ஆற்றை மூடும் திட்டத்தை அமைச்சர் ராஜூ தொடங்கியபோது சமூகவலைதளவாசிகள் அவரை வறுத்தெடுத்து மீம்ஸ்களை போட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்