தமிழகத்தில் பல கொடுமைகளை சந்திக்கும் இலங்கை அகதிகள்: முகாம் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Harishan in இந்தியா

தமிழகத்தில் பல இன்னல்களை சந்தித்து வருவதாக பெரம்பலூர் அகதிகள் முகாமில் தலைவர் சஸ்டிக் ராஜா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் அகதிகளின் நிலை குறித்து இந்திய அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து வந்த அந்த அதிகாரிகள் சரியான முறையில் ஆய்வை நடத்தவில்லை என அகதிகள் முகாம் தலைவர் சஸ்டிக் ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சரியான முறையில் அகதிகளின் குறைகளை அதிகாரிகள் கேட்கவில்லை; எங்களிடம் நிறைய கோரிக்கைகள் இருந்தன, ஆனால் அவற்றை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தங்களுக்கான குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என்றும், மிகவும் கீழ்தரமாக தங்களை விமர்சிப்பதாக பெரம்பலூர் தாசில்தார் மீது வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார் அகதிகளின் தலைவர் ராஜா.

ரோல்கால் என்ற முறையில் இரவு 11 மணிக்கு மேல் வந்து கதவை தட்டி அவமானப்படுத்துவது உள்ளிட்ட பல துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலை மாறிட இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்