தினகரனை பார்த்ததும் அதிமுக எம்எல்ஏ-க்களின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Report Print Harishan in இந்தியா

தினகரன் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் இன்று முதல் கூட்டத்தொடர் கூட்டப்பட்ட நிலையில் அவருக்கு 148-வது எண் கொண்ட இருக்கை ஆளுங்கட்சிக்கு எதிர்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதில் அவர் இருக்கைக்கு எதிரே அமர்ந்திருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தன்னை பார்த்து குனிந்த தலை நிமிராமல் சிரித்ததாக தினகரன் கூறியுள்ளார்.

மேலும் சில அமைச்சர்கள் தன் பக்கம் தலையை கூட திருப்பவில்லை என்றும், வேறு சில அமைச்சர்கள் தன் இருக்கையை எட்டி பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டதால் அதிமுக உறுப்பினர்கள் தன் கண்களுக்கு நன்றாக தெரிந்ததாகவும் தினகரன் கூறியுள்ளார்.

ஆளுநர் உரை முடிக்கும் வரை சட்டமன்றத்தில் அமர்ந்து முழுவதையும் கேட்டுவிட்டு தினகரன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்