காதலன் கூறிய மிரட்டல் வார்த்தைகள்: தற்கொலை செய்த காதலி

Report Print Santhan in இந்தியா

காதலன் மிரட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் சாலையக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஆனந்தி, இவரும் அருகில் உள்ள கொடுக்கூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

அப்போது பாஸ்கர் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி ஆனந்தியை பல முறை அழைத்து தனியாக பேசியுள்ளார்.

அதன்பின் நாட்கள் செல்ல செல்ல பாஸ்கர் தன்னுடைய பேச்சு வார்த்தையை குறைத்துள்ளார். எங்கு தன்னை ஏமாற்றிவிடுவாரோ என்று எண்ணி ஆனந்தி 2017-ஆம் ஆண்டு பாஸ்கரன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பாஸ்கரை கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து ஜாமீனில் வந்த பாஸ்கர் என்னை சிறைக்கு அனுப்பிய உன்னைக் கொன்றுவிடுவேன், உன் கண்ணு முன்னாடியே உன் அப்பாவை வெட்டுவேன். அதுமட்டுமின்றி உன் குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளான்.

இதன் காரணமாக பெரிதும் மனமுடைந்து காணப்பட்ட ஆனந்தி திடீரென்று விஷம் அருந்தினார். ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு பாஸ்கர் தான் காரணம் என்று ஆனந்தியின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்