கச்சத்தீவு மீட்பு! காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பு: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

Report Print Kabilan in இந்தியா

இன்று நடைபெற்ற தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள்,

 • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 • பொருளாதார செழுமை, சமூகநீதிக்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இயற்றி, சிறந்த ஆட்சியை அரசு வழங்கும்.
 • கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் மூலம் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
 • காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து அமைக்கப்படும்.
 • கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்க, மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம், நினைவு இல்லமாக மாற்றியமைக்கப்படும்.
 • அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக, ஜப்பான் உதவியுடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
 • ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.200 கோடி ஒதுக்கப்படும். இழப்பீடு வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்.
 • முல்லைப் பெரியாறு அணையை, 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
 • கறவை பசு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
 • நாகை - கன்னியாகுமரி வரையிலான சாலைகள் மேம்படுத்தப்படும்.
 • நகர்புறங்களில் சுய உதவிகுழுக்கள் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்