ஒரு மாதத்திற்குள் அரசியலுக்கு வருவேன்: பிரபல நடிகர் பேட்டி

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகரான பாக்யராஜ் நேரடியாக அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டதாக பேட்டியளித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திரைப்பிரபலங்களாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதித்துவிட்டனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

அப்போது, நான் நேரடியாக அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டேன் என்றும் அதற்கான காலமும் நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

ஆனால் தற்போது என்னால் எதுவும் கூற முடியாது, அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது.

நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டதாக கருதுகிறேன், அதற்காக நீண்டகாலம் எடுக்கமாட்டேன், ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவிடுவேன், அப்போது யாருக்கு ஆதரவு என்பது உங்களுக்கு தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்