போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த எதிரொலி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Report Print Harishan in இந்தியா

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்குவதில் அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம்; ஓய்வூதியம் மற்றும் பனிக்கொடையை முழுமையாக வழங்காதது ஏன்? என்பன போன்ற சரமாரி கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பினர்.

மேலும் போக்குவரத்து தொழிலாளர்காளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவைத் தொகையான 1,138 கோடி ரூபாயை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்