இது எங்களுடைய லோகோ: ரஜினிக்கு மும்பையில் இருந்து வந்த சிக்கல்

Report Print Gokulan Gokulan in இந்தியா

ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டத்தில் இருந்தே நம் வீட்டு குழாய்களில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அவர் தினமும் செய்திகளில் வந்துவிடுகிறார். அவர் வருவது மட்டுமல்லாமல் கூடவே சர்ச்சைகளையும் கூட்டி கொண்டு வருகிறார்.

மேலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இணையதளத்தில் பக்கம் துவங்கி அதில் ரசிகர்களை சேர்த்து வருகிறார்.

அந்த இணையத்தில் இருக்கும் லோகோவும், ஸ்லோகனும் தான் பல சச்சரவுகளை இவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் இணையதளமான www.rajinimandram.org என்பதில் பாபா சின்னமான அவரது டிரேட் மார்க் சிம்பிள் இருக்கிறது.

பாபா படத்தில் இருந்து ரஜினி ரசிகர்கள் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்கள், மேலும் ரஜினி கட்சியின் சின்னம் இதுவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மும்முரம் காட்டிய மும்பை நிறுவனம்

இந்த நிலையில் மும்பையில் இருக்கும் நிறுவனம் ஒன்றும் இந்த முத்திரைக்கு உரிமை கோரி இருக்கிறது. இந்த முத்திரை எங்களுடையது என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

வொக்ஸ்வெப் என்ற ஊடக நிறுவனம் இந்த பிரச்சனையை எழுப்பியதில்லாமல், மேலும் இந்த நிறுவனம் தங்கள் மொபைல் போன், செயலி மற்ற நிறுவன தயாரிப்புகளுக்கு இந்த பாபா முத்திரையை தான் பயன்படுத்துகிறது என்று கூறி ரஜினிக்கு கடிதம் அனுப்பியது.

சீண்டும் சீமான்

ஒருபுறம் இந்த பிரச்சனைக்கு எந்த பதிலும் அளிக்காத ரஜினிக்கு, மருபுறம் சீமான் இந்த முத்திரை சாத்தானை குறிக்கிறது என்று கூறிவருகிறார்.

இப்படி ரஜினியை ரவுண்டு கட்டும் பல பிரச்சனைகளை படத்தில் வருவது போன்று ஒரே பாடலில் உச்சத்தை தொட்டு அரசியல் பாதையிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருவாரா?? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்