சீமானை கடுமையாக விமர்சித்த நாமல் ராஜபக்சே

Report Print Santhan in இந்தியா

சீமான் சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை பயன்படுத்துகிறார் என்று ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார், இதனால் அவர் அரசியலில் இறங்குவது உறுதியாகியதால், திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது சீமான், நாமல் ராஜபக்சே ரஜினிகாந்துக்கு வாழ்த்து கூற வேண்டியதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நாமல் ராஜபக்சே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் பேசியது தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்து, சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார். இலங்கை தமிழர்கள் மீது சீமானுக்கு உண்மையில் அக்கறையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்