சட்டசபைக்குள் முதல் முறையாக நுழைந்தார் டிடிவி தினகரன்: எங்கு அமர்ந்துள்ளார்?

Report Print Raju Raju in இந்தியா

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் சுயேட்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் கலந்து கொண்டுள்ளார்.

ஆர்.கே நகர் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக நின்று தினகரன் மாபெரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்தாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி இருக்கிறது.

ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

அதேபோல் ஆர்.கே நகர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கும் இதுதான் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகும்.

சட்டசபையில் தினகரனுக்கு 148-ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த இருக்கைகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்