ஆசையாக வளர்த்த மகன்: தாய் மற்றும் சித்தியை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆசையாக தத்தெடுத்து வளர்த்த மகனே ஆஸ்திக்காக தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவேற்காடு மாதிரிமேடு மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாயகி(85), இவருக்கு கிருஷ்ணவேணி என்ற சகோதரி உள்ளார், அவரும் அதே பகுதியில் தான் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரங்காநாயகியின் குடும்பத்தினர் சமீபத்தில் வெளியூர் சென்றுள்ளனர், இதனால் அவருக்கு துணையாக கிருஷ்ணவேணி உடன் இருந்துள்ளார்.

அதன்பின் மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், அவரது உறவினர்கள் கதவை திறந்து பார்த்த போது, உள்ளே இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

ஆனால் அவர்களிடமிருந்த நகைகள் போன்றவைகள் காண்மால் போயிருந்ததுடன், கொலையாளி சிக்காமல் இருப்பதற்காக அங்கு மசால் மற்றும் மஞ்சள் பொடிகளை தூவிவிட்டு சென்றுள்ளான்.

இது நகைக்காகத் தான் நடந்திருக்கும் என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த கொலையை செய்தது ரங்கநாயகியின் வளர்ப்பு மகனான பாலகிருஷ்ணன் தான் என்பது தெரியவந்துள்ளது.

அதன்பின் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, ரங்கநாயகி-மாரி தம்பதிக்கு நீண்ட காலமாக வாரிசு இல்லாத காரணத்தினால் பாலகிருஷ்ணனை தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏழுமலை பிறந்தாலும், இருவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் சொத்து விவகாரத்தில் ரங்கநாயகி, சொந்த மகனுக்கே சாதகமாக இருந்துள்ளார், இதனால் பாலகிருஷ்ணன் மற்றும் ரங்கநாய்கிக்கு இடையே தொடர்ந்து சண்டை வந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது, இருப்பினும் கோபத்தில் இருந்த பாலகிருஷ்ணன், சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து இருவரையும் கழுத்தறு கொலை செய்துவிட்டு கொலையை, நகைக்காக நடந்தது போல திசை திருப்ப முயன்றுள்ளார்.

பொலிசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில் முன்னுக்கு பின்னாக பதிலளித்ததால் சிக்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்