எச்சரிக்கை விடுத்த நடிகர் கமல்ஹாசன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுரையில் ஆர்.கே சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனை கண்டித்து நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிடிவி தினகரன் முறைகேடு செய்து ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றிபெற்றதாக அப்போது கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது.

விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன என்று எச்சரித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்