பலாத்கார புகார் கூறிய இளம்பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவை சேர்ந்த பிரபல இளம் நடிகர், தன் மீது பலாத்கார புகார் அளித்த இளம் பெண்ணின் புகைப்படம் மற்றும் விவரங்களை இணையத்தில் வெளியிட்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்ணிமுகுந்தன் என்ற நடிகரின் வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர், இளம்பெண் ஒருவர் புதிய படத்திற்காக கதையை கூறுவதற்காக சென்றுள்ளார்.

கதையை கேட்ட அவர் அந்த இளம்பண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கொச்சி பொலிசில் புகார் செய்தார். இது தொடர்பாக பொலிசார் உண்ணிமுகுந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர். எனினும், அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் புகார் கூறிய இளம்பெண்ணின் புகைப்படம் மற்றும் விவரங்களை இணையத்தில் உண்ணிமுகுந்தன் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே உண்ணிமுகுந்தன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் கோரி இளம்பெண் எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

ஆனால் பொலிஸ் பாதுகாப்பு அளிக்க மறுத்த நீதிமன்றம் விசாரணையை வரும் 27க்கு ஒத்திவைத்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்