9 வயது சிறுவனை கொலை செய்த 15 வயது சிறுவன்: அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 9 வயது சிறுவனை கொலை செய்த 15 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜாராத் மாநிலத்தின் மெசனா மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஹிரன் தாகூர் (9) என்ற சிறுவன் கடந்த 29-ஆம் திகதி வீட்டிலிருந்து காத்தாடி விட செல்வதாக கூறி வெளியில் சென்ற நிலையில் மாயமாகியுள்ளான்.

இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஹிரனை தேடி வந்தார்கள்.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் ஆறு நாட்கள் கழித்து சிறுவன் ஹிரன் சடலமாக பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டான்.

ஹிரன் மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த பொலிசார் இது தொடர்பாக 15 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஹிரனை கொலை செய்ததை அவன் ஒப்பு கொண்டான். ஹிரனும், 15 வயது சிறுவனும் ஒன்றாக சேர்ந்து காத்தாடி விடும் போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஹிரனை மூச்சு திணற வைத்து சிறுவன் கொலை செய்துள்ளான். மேலும் தான் ஹிரனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி செய்யவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளான்.

சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்