சச்சின் டெண்டுல்கர் மகளை தொந்தரவு செய்த இளைஞர் கைது

Report Print Raju Raju in இந்தியா

சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவுக்கு போன் செய்து கீழ்தரமாக பேசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சினின் மகள் சாரா (20). இவரின் மும்பை வீட்டு தொலைபேசி நம்பருக்கு மர்ம நபர் ஒருவர் 20-க்கும் அதிகமான முறை போன் செய்துள்ளார்.

போனில் சாராவிடம் கீழ்தரமாக பேசியதுடன், அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

இதோடு சாராவை கடத்துவேன் எனவும் மிரட்டியுள்ளார். இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போன் டவரை வைத்து சாராவுக்கு தொந்தரவு கொடுத்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

நபரின் மனநலம் சரியில்லை என அவர் குடும்பத்தார் கூறியுள்ள நிலையில் அது உண்மையா என கண்டறிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவுப்படவுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் வீட்டு தொலைபேசி நம்பரை குறித்த நபர் எப்படி கண்டுப்பிடித்தார் என்ற விபரம் தெரியவில்லை.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers