பேஸ்புக்கில் பெருமை பேசி மாட்டிக்கொண்ட இளைஞர்: பொலிஸ் கொடுத்த ட்ரீட்மெண்ட்டில் மன்னிப்பு கோரிய வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தின் போது இளைஞன் ஒருவர் செய்த செயல் வைரலானதைத் தொடர்ந்து, தற்போது அந்த இளைஞன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னை காமராஜர் கடற்கரை சாலையில் கடந்த மாதம் 31-ஆம் திகதி புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களைக் கண்ட பொலிசார் வேகமாக ஓட்டாமல் மெதுவாக செல்லும் படி அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.

ஆனால் இளைஞர்கள் உடனடியாக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட்டை இரு சக்கர வாகனத்துடன் இழுத்து சென்றுள்ளனர்.

இதைக் கண்ட பொலிசார் அதிர்ச்சியடைந்த அவர்களை துரத்தியுள்ளனர். ஆனால் இளைஞர்கள் அதிவேகமாக சென்றதால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலை இளைஞர்கள் பேரிகார்ட்டை இழுந்துச் செல்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது, அதுமட்டுமின்றி அந்த பேரி கார்ட்டை இழுந்துச் சென்றதை தற்பெருமை பேசி பீட்டர் தனது பேஸ் புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

ஏற்கனவே பொலிசார் இவரை வலை வீசி தேடி வந்த நிலையில், இந்த வீடியோவை பொலிசார் சைபர் க்ரைம் மிடம் கொடுத்து பீட்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பின் அவர்கள் பீட்டரை உடனடியாக கைது செய்தனர். பொலிசார் என்ன செய்தார்களோ தெரியவில்லை, அவ்வளவு வீரசாகசமாக பேசிய பீட்டர், அது குறித்த மற்றொரு வீடியோவில் கெத்து என்று நினைத்து செய்துவிட்டோம். இதனால் பொதுமக்களுக்கு இடையூராகிவிட்டது. நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்