மாணவியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்த மாணவன்: பள்ளி நிர்வாகம் முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாராட்டுவதாக கூறி நீண்ட நேரம் கட்டிப்பிடித்த 12ஆம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட இருவரையும் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் திருவனந்தபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் சசி தரூர் தலையிட்டு சுமூகமாக பேசி தீர்வை ஏற்படுத்தியுள்ளார்.

குறித்த பிரச்னையில் சிக்கிய மாணவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டதால் +2 தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவரின் பெற்றோர் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்தனர்.

இந்நிலையில் செயிண்ட் தாமஸ் செண்ட்ரல் ஸ்கூல் நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவர், மாணவி, பெற்றோர் மற்றும் அனைவருடனும் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இதனையடுத்து குறித்த விவகாரத்தில் தீர்வு எட்டியதை அடுத்து மாணவரையும் மாணவியையும் மீண்டும் சேர்த்துக் கொள்ள பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக பள்ளியின் முடிவை சசி தரூர் விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்