சடலத்துடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மருத்துவர்: நெஞ்சைப் பிசையும் காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா
192Shares

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இறந்துபோன தங்கையின் உடலைத் தகனம் செய்யப் பணம் இல்லாததால், மருத்துவர் ஒருவர் மூன்று நாட்களாகச் சடலத்துடன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தைச் சோ்ந்தவா் நில்மணி தாரா (70). இவருக்கு கரபி தாரா, புரவி தாரா என்ற இரண்டு சகோதரிகள் இருந்துள்ளனர்.

இவர்கள் 3 பேருக்கும் திருமணம் நடைபெறவில்லை. கரபிக்குக் கடந்த 24ஆம் திகதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை நில்மணி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால் மருத்துவ சிகிச்சை பலனின்றி கரபி அன்றிரவே மரணமடைந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து கரபியின் உடலை நில்மணி 25ஆம் திகதி வீட்டிற்குக் கொண்டுவந்தார்.

தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் இறுதிச் சடங்கு செய்வதற்கான பணத்தை அளித்துள்ளனர். ஆனால் நில்மணி அதனை வாங்க மறுத்துவிட்டார்.

உடலும் வீட்டிற்குள் வைக்கப்பட்டது. நில்மணியின் மற்றொரு சகோதரியும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.

இதனிடையே வீட்டிலிருந்து துர்நாற்றம் எழும்பத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் புதன்கிழமை காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

அங்கு வந்த காவலர்களை நில்மணி வீட்டிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து காவலர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் காவலர்கள் தங்களது சொந்த செலவில் கரபியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தகனம் செய்தனர்.

தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணியாற்றி வந்த நில்மணி, மருத்துவமனை நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 2006ஆம் ஆண்டிலிருந்து பணிக்குச் செல்லவில்லை.

வேலை இழந்த நிலையில், அவர்கள் மூவரும் பிறருடன் சரியாகப் பழகாமல் தங்களுக்கென இருந்த நிலங்களை விற்று வாழ்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்