ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று டி.டி.வி.தினகரன் கனவு காண்கிறார். அவரின் கனவுக்கு பதில் சொல்ல முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், இன்று சட்டசபை உறுப்பினராக பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய அவர் கூறுகையில், அதிமுக-வில் ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்களின் பக்கம் தான் உள்ளனர். சசிகலா தலைமையிலான அதிமுக-வே உண்மையான இயக்கம் என ஆர்.கே.நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டனர்.
துரோக வரலாற்றில் துரோகத்திற்கு இடமில்லை. மனதளவில் பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் எங்களின் பக்கமே உள்ளனர். சிலர் வழிவிட்டால் கட்சியை தக்கவைக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், ‘இந்த ஆட்சி கவிழும் என்று டி.டி.வி.தினகரன் கனவு காண்கிறார். அவரின் கனவுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ என தெரிவித்துள்ளார்.