மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தார்: பிரபல நடிகர் மீது இளம்பெண் புகார்

Report Print Fathima Fathima in இந்தியா
515Shares

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை கற்பழித்ததாக பிரபல தெலுங்கு நடிகர் சுப்ரமண்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த சுப்ரமண்யா கன்னட படத்தில் நடித்துள்ளார், இவருக்கும் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் காதலாக மாறவே, திருமணம் குறித்து பேச்சு அடிபட்டுள்ளது, ஆனால் சுப்ரமண்யா ஏதோதோ காரணங்கள் சொல்லி திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 1ம் திகதி, சகோதரியின் வீட்டு விழாவிற்க அழைத்து செல்வதாக கூறி வாடகை வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளார்.

அங்கே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்ததாக தெரிகிறது, அத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி வெளியே சொன்னால் ஆசிட் வீசிவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார், மேலும் யார் 20 லட்ச ரூபாய் பணம் தருகிறார்களோ அவர்களையே கல்யாணம் செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அப்பெண் பொலிசில் புகார் அளிக்க தலைமறைவாகிவிட்டார், பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்