சற்றும் தாமதிக்காமல் எம்எல்ஏ-வை திருப்பி அறைந்த பெண் பொலிஸ்

Report Print Fathima Fathima in இந்தியா

தன்னை அடித்த எம்எல்ஏ ஆஷா குமாரியை சற்றும் தாமதிக்காமல் பெண் பொலிஸ் ஒருவர் ஓங்கி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, இதுகுறித்து ஆலோசிக்க சிம்லாவில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

ராகுல்காந்து கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது, அப்போது வந்த எம்எல்ஏ ஆஷா குமாரியை பொலிசார் உள்ளே அனுமதிக்க முடியாமல் போனது.

இதனால் கோபமடைந்த ஆஷா குமாரி பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸை கன்னத்தில் அறைந்தார், சற்றும் தாமதிக்காத பெண் பொலிஸ் எம்எல்ஏ-வை அடித்தார்.

குறித்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்