தமிழக சட்டமன்ற வளாகத்தில் எம்எல்ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார் டிடிவி தினகரன்
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் காலியாக இருந்த ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த 21ம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இதில் அதிமுக-வை தவிர அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று தமிழக சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினராக சபாநாயகர் தனபால் தலைமையில் டிடிவி தினகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.