ஹாசினியையும், தாயையும் நான் கொலை செய்யவில்லை: தஷ்வந்த் பரபரப்பு

Report Print Kabilan in இந்தியா

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த் பொலிசார் உண்மையை கூற விடாமல் தடுக்கின்றனர் என தெரிவித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

மாங்காடு சிறுமி ஹாசினியின் கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று நீதிமன்றம் வந்த தஷ்வந்த், சிறுமி ஹாசினியையும், தாயையும் தான் கொலை செய்யவில்லை என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தால் உண்மையை கூறத்தயார் எனவும் தெரிவித்துள்ளான்.

இதற்கிடையே பொலிஸ் வாகனத்தில் ஏற வந்த தஷ்வந்தை செய்தியாளர்கள் படம் பிடித்துள்ளனர்.

அப்போது தஷ்வந்த், என்ன நடந்தது என்று தெரியாமல் பொலிஸ் சொல்வதையே செய்தியாக வெளியிடுகிறீர்கள். நான் பேட்டியளிக்கிறேன், என்னுடைய பேட்டியை ஒளிபரப்புங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்ற போது, பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர்.

அப்போது, தன்னை உண்மையை கூற விடாமல் பொலிசார் தடுப்பதாக தஷ்வந்த் கோஷமிட்டுள்ளார்.

பொலிசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தஷ்வந்த் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்