ஜெ.தீபாவை காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்: நாடகமாடியது அம்பலமானது

Report Print Fathima Fathima in இந்தியா

தனது வீட்டையும், அலுவலகத்தையும் மர்மநபர்கள் தாக்கியதாக ஜெ.தீபா பொய் புகார் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக ஜெ.தீபா மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்படி பொலிசார் விசாரணை நடத்தியதில், ராமச்சந்திரன் தன் மேல் குற்றமில்லை என தொடர்ந்து கூறிவந்தார்.

மேலும் தீபாவுக்கு பணம் அளித்துள்ளதாகவும், அதை திருப்பி கேட்டதற்காக சதி செய்து பொலிசிடம் மாட்டிவிட்டதாகவும் தெரிவித்தார்.

சில ஆதாரங்களையும் சமர்பித்ததால் பொலிசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முடிவு செய்தனர்.

சம்பவ தினத்தன்று தீபா வீடு, அலுவலகத்தில் இரவு முதல் காலை வரை சிசிடிவி அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, தீபா வெளியில் நின்று கொண்டு கைகாட்ட ஆதரவாளர்கள் நாற்காலிகளை உடைப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஆதரவாளர்களை கைது செய்த பொலிசார், தீபாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்