ரஜினியின் மனைவி லதா நிறுவனத்தை அகற்றலாம் என நீதிமன்றம் உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தும் டிராவல்ஸ் நிறுவனத்தை பொலிஸ் உதவியுடன் அகற்றலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடையில் கடந்த 25 ஆண்டுகளாக லதா டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியதை எதிர்த்து லதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 20 ஆண்டுகளுக்கே பிறகே வாடகை உயர்த்தப்பட்டுள்ளது, உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த விரும்பாவிட்டால் லதா கடையை காலி செய்யலாம் என வாதிட்டார்.

ஆனால் 33 சதவீத மதிப்பிடுதல் விதியை மீறி வாடகை உயர்த்தபடுவதாக லதா சார்பில் கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லதா ரஜினிகாந்த் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், நிலுவை வாடகையை லதா ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் எனவும் தவறினால் கடையை மாநகராட்சி ஏலத்தில் விடலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

கடையை காலி செய்ய மறுத்தால் பொலிஸ் உதவியுடன் மாநகராட்சி, கடையை காலி செய்யலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்