மும்பையில் பயங்கர தீ விபத்து: 15 பேர் பலி

Report Print Kabilan in இந்தியா

மும்பையின் பிரபல கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பையின் லோயர் பேரல் பகுதியில் பிரபல கமலா மில்ஸ் வளாகம் உள்ளது.

இங்கு பத்திரிக்கை மற்றும் ஊடக அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன.

இந்த வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டன.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது, இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளனர், பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த பலருக்கும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

28 வயது பெண் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தாலும் உறுதியான தகவல் வெளிவரவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்