மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்: மூடி மறைக்க பஞ்சாயத்தார் செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 16 வயது பள்ளி மாணவியை ஆசிரியர் ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்யும் ஸ்ரீந்தர் குமார் சர்மா தன்னிடம் படிக்கும் 16 வயது மாணவியை கடந்த 4-ஆம் திகதி சிறப்பு வகுப்புக்கு போகலாம் என கூறி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மாணவியை சர்மா விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரின் நண்பர் ராஜ் தேவ் தாகூரும் உடன் இருந்துள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து மாணவியை அங்கேயே தனியாக விட்டு இருவரும் தப்பி சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி சம்பம் குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்க ஆசிரியர் சர்மாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ராஜ் தேவை தேடி வருகிறார்கள்.

இதனிடையில், இந்த விடயத்தை மூடி மறைக்க பாதிக்கப்பட்ட மாணவியை சிறுவன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்தும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்