சசிகலா மௌன விரதம்: இன்றைய சந்திப்பில் நடந்தது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ஜெயலலிதா நினைவு நாளிலிருந்து சசிகலா மௌன விரதம் இருந்து வருகிறார்.

ஜனவரி மாதம் இறுதி வரை மௌன விரதம் இருப்பார் என தெரிகிறது, ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி குறித்து சசிகலாவிடம் கூறினேன்.

அடுத்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தேன், அனைத்தையும் கேட்டுக் கொண்டே தலையசைத்தார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, ஜெயலலிதா மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை.

சசிகலாவிடம் வீடியோவை வாங்கி நான் தான் வெற்றிவேலிடம் கொடுத்தேன், எங்களையும் மீறி அவர் வீடியோவை வெளியிட்டுவிட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்