தனுஷ் எங்க மகன் தான்! இந்த உண்மை ரஜினிக்கும் தெரியும்

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக்கோரி வழக்கு தொடர்ந்த மேலூர் கதிரேசன் தம்பதி நடிகர் ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தங்களின் மகன் என கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கதிரேசன் தம்பதியின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகரும் தனுஷின் மாமனாருமான ரஜினிகாந்துக்கு கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதி தற்போது கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், கலைச்செல்வன் என்கிற தனுஷ் எங்களை வந்து ஒருமுறை பார்த்து செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் குடும்ப உறவுகள் மேம்பட தனுஷ் எங்களை சந்திப்பதை நீங்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்