பறிபோகிறதா டிடிவி தினகரனின் எம்எல்ஏ பதவி? வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ஆர்கே நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தினகரனின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார்.

தேர்தலுக்கு முன்பு தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்ததாகவும், தேர்தலுக்கு பின்னர் டோக்கனுக்கு ரூ.10 ஆயிரம் தரப்படும் என அறிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தேர்தல் முடிந்தும் பணம் கைக்கு வராததால் தொகுதி மக்கள் பொறுமை இழந்துள்ளனர்.

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் ஜான்பீட்டரிடம் (35) தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து ஜான் பீட்டர் மற்றும் சரண்ராஜ் (20), செல்வம் (39), ரவி (40) ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படுகிறது

இதன் பேரில் கார்த்திகேயன் பொலிசில் புகார் கொடுக்க நால்வரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரூ.10,000 தருவதாக கூறி இவர்கள் டோக்கன் சப்ளை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது, தினகரனுக்கு சிக்கலை எழுப்பியுள்ளது

தினகரன் தேர்தல் செலவு கணக்கில் இந்த பணத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் செலவுகளை தினகரன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்,

அப்போது வாக்காளர்களுக்கு கொடுத்த பண மதிப்பையும் தினகரன் செலவு கணக்கில் சேர்த்தால், தினகரன் எம்எல்ஏ பதவி பறிபோகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்