2 சமோசா... 600 ரூபாய்! நம்ம கோஹ்லி ரெஸ்டாரண்ட்ல தான்

Report Print Kavitha in இந்தியா

கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, கிரிஸ் கெயில், ஜாகிர் கான் வரிசையில் இப்போது விராட் கோலியும் சேர்ந்துவிட்டார். இது கிரிக்கெட்டைத் தாண்டிய ஒரு விஷயம். கோலி, இப்போது ‘நியூவா’ என்கிற ரெஸ்டாரெண்ட்டின் ஓனர்.

டெல்லி டேர் டெவில்ஸுக்கு எதிராக விளையாடி ஜெயித்தபோது, தனது RCB அணி வீரர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்தார் கோலி.

‘‘டெல்லி டேர் டெவில்ஸைத் தோற்கடித்ததுக்காக டெல்லியில் ஓர் அசத்தல் ட்ரீட் தரப்போகிறேன்’’ என்று தனது RCB வீரர்களை அவர் அழைத்துச் சென்ற இடம் - NUEVA என்னும் ஸ்டார் ரெஸ்டாரெண்ட். சாப்பிட்டு முடித்த பிறகுதான் தெரிந்ததாம் - இது கோலியின் சொந்த ரெஸ்டாரெண்ட் என்று!

ஷேன் வாட்ஸன், ABD வில்லியர்ஸ் என்று பல ஜாம்பவான்கள் ட்ரீட்டில் செம ஹேப்பி. ‘‘இதற்காகவே அடிக்கடி RCB அணி ஜெயிக்க வேண்டும்’’ என்று கோலியின் ரெஸ்டாரெண்ட்டில் கிடைத்த பல நாட்டு உணவுகளை விழுங்கியபடி கமென்ட் அடித்தாராம், RCB அணியின் கோச் டேனியல் வெட்டோரி.

டெல்லி ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ள ‘நியூவா’ ரெஸ்டாரெண்ட்டில் கூட்டம் அள்ளுகிறது. கோலியின் ரெஸ்டாரெண்ட் இது என்பதைத் தாண்டி பல 'வாவ்'கள் இதில் அடங்கியிருக்கின்றன. முதல் அம்சம் - நியூவா ரெஸ்டாரெண்ட்டின் செஃப் மைக்கேல் ஸ்வாமி. தென் அமெரிக்க உணவு வகைகளைச் சமைப்பதில் படு எக்ஸ்பர்ட்.

‘‘கோலியின் உணவகத்தில் நான் தலைமை செஃப் எனும்போது பெருமையாக இருக்கிறது’’ என்று சொல்லும் மைக்கேல் ஸ்வாமி, இரண்டு தடவை ‘காவுர்மண்ட் அவார்டு’ (Gourmand Award) ஜெயித்தவர். இந்தியாவின் டாப்-50 செஃப்களில் ஒருவர் மைக்கேல்.

உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள உணவுகளைச் சமைப்பதிலும் கைதேர்ந்தவராம். Ceviche de Camarones, Spicy mole, La Caja de Pinturas, Peruvian piscos - இவையெல்லாம் கோலியின் நியூவா ரெஸ்டாரெண்ட்டில் மைக்கேல் செஃப்பின் கண்டுபிடிப்பில் உருவான தென் அமெரிக்க ஐட்டங்கள்.

தரை தளம், முதல் தளம் என்று இரண்டு தளங்களில் இயங்குகிறது நியூவா. கீழே பார். இதில் இன்னொரு ஸ்பெஷல் - இங்குள்ளவை கிளாஸ் டைனிங். அதாவது, முழுக்க கண்ணாடியால் பதிக்கப்பட்டிருக்கும் இங்கே, கிச்சனில் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே சாப்பிடலாம். மற்றபடி காஸ்ட்லி ஹனிமூன் ஜோடிகளுக்கான மூன்லைட் டின்னர்தான் எனிடைம் ஸ்பெஷலாம்.

பார் வைக்க வேண்டும் என்றால், அரசு அனுமதி பெற வேண்டும். ‘‘இதற்கான லைசென்ஸை முறையாகப் பெற்றுத்தான் பார் நடத்தப்படுகிறது’’ என்று உறுதியளிக்கும் கோலி, ஏகப்பட்ட மாக்டெய்ல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறாராம். Que Melon மற்றும் Baya Beso - இவை இரண்டும் இளசுகளின் ஃபேவரைட்டாம்.

முழுக்க முழுக்க தென் அமெரிக்க உணவகம் என்று விளம்பரப்படுத்தப்படும் நியூவா ரெஸ்டாரெண்ட்டில் - ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஜப்பான் போன்ற நாடுகளின் பாரம்பரிய உணவுகள்தான் பிரதானமாகப் பரிமாறப்படுகின்றனவாம். அப்போ இந்திய ஐட்டங்கள்?

உண்டு. சமோசா, சிக்கன், காபி, டீ, லெமன் ஜூஸ் என போனால் போகட்டும் என்று சில ஐட்டங்களை விற்பனை செய்கிறார்கள். அதேபோல், மெனு கார்டிலும் டாலரில்தான் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சமோசாக்கள் கொண்ட ஒரு பிளேட்டின் விலை 9.50 டாலர். கோலி ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால்... ஆறு செஞ்சுரி! அதாவது... 600 ரூபாய். இதுதான் இங்கே ஆரம்ப விலை.

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்