சசிகலா உறவினர்களிடம் தொடரும் வருமானவரி சோதனை

Report Print Harishan in இந்தியா

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த நவம்பர் 9-ஆம் திகதி முதல் 13-ஆம் திகதி வரை சசிகலா மற்றும் தினகரன் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு மற்றும் அலுவலகங்கள் என 2000 இடங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளிவராத நிலையில் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டன.

இந்நிலையில் நேற்று(27/12/2017) இரண்டாவது முறையாக சசிகலா உறவினர், இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான இடம் உட்பட 14 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை படப்பை அருகே உள்ள மிடாஸ் மதுபான ஆலைக்கு பாட்டில்கள், அட்டை பெட்டிகள் சப்ளை செய்யும் குடோன் உரிமையாளரும் கார்த்திகேயன் நண்பருமான சந்திரசேகருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்டவற்றில் சோதனை நடைபெற்றது.

அதனை முடித்துக் கொண்டு மிடாஸ் ஆலையில் சீல் வைக்கப்பட்டிருந்த அரைக்கும் சென்று சோதனை நடத்தியுள்ளனர் வருமானவரித்துறை அதிகாரிகள்.

இதனைத் தொடர்ந்து மிடாஸ் நிறுவனத்துக்கு காலி பாட்டில்கள் சப்ளை செய்து வரும் சந்திரசேகருக்கு சொந்தமான கோவையில் உள்ள SVS பொறியியல் கல்லூரி அலுவலகத்திற்கு காலையில் சென்ற 5 பேர் கொண்ட அதிகாரிகள் மாலை வரை சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்