12 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை: வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்திருந்த குற்றவாளி கைது

Report Print Printha in இந்தியா

கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மும்பையை சேர்ந்த குற்றவாளியான மனோஜ் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த மனோஜ் திவாரி, பி.எட் படிப்பில் சேர்த்து விடுவதாகக் கூறி 2002-ம் ஆண்டு மூன்று பேரிடம் ரூ.1 லட்சம் வரை தொகை பெற்று ஏமாற்றிய வழக்கில் தேடப்படும் குற்றவாளி.

12 ஆண்டுகளாக வீட்டு முகவரியை அடிக்கடி மாற்றி வந்ததால் பொலிசிடம் சிக்காமல் தப்பி வந்தார், இந்நிலையில் அவரது செல்போனை வைத்து பொலிசார் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று பொலிசார் வீட்டுக்கு சென்ற போது, அவரது மனைவி உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.

ஒருவழியாக உள்ளே நுழைந்த பொலிசார் வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்திருந்த மனோஜ் திவாரியை கைது செய்தனர்.

தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக அவரது மனைவி மீதும் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்