திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்த ஜோடி: சந்தேகம் ஏற்பட்டதால் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு ஜோடி தனியாக வாழ்ந்து வந்த நிலையில் காதலி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவர் தலையில் கல்லை போட்டு கொன்ற காதலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சிக்ரி அம்பா கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அகஸ்டின் என்ற இளைஞரும், மாதுரி என்ற செவிலியரும் திருமணம் செய்து கொள்ளாமலே சில ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தார்கள். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக மாதுரி நடவடிக்கையில் அகஸ்டினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அகஸ்டினிடம் சரியாக பேசாமல் இருந்த மாதுரி, செவிலியர் பதவி உயர்வு தெரிவு எழுத ஒரு இளைஞருடன் அலகாபாத்துக்கு செல்லவிருப்பதாக அகஸ்டினிடம் கூறியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அகஸ்டின் மாதுரியுடன் அலகாபாதுக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்தவுடன் மாதுரியின் செல்போனை அகஸ்டின் கேட்க அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் மாதுரிக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு இருப்பதாக எண்ணி ஆத்திரமடைந்த அகஸ்டின் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் மாதுரியின் சடலத்தை கைப்பற்றியதோடு தலைமறைவாக இருந்த அகஸ்டினை கைது செய்துள்ளார்கள்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்