டிடிவி தினகரன் மக்களுக்கு நன்றி சொல்லாதது ஏன்?

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் அதிமுகவுக்கு மட்டுமே டெபாசிட் கிடைத்தது.

வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை இதுவரையிலும் டிடிவி தினகரன் நேரில் சந்திக்கவில்லை.

கடந்தமுறை ஆர்.கே.நகர் தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட்ட தினகரன் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்பட்டது, ஆனால் தேர்தல் ரத்தானது.

இந்நிலையில் தற்போதைய தேர்தலின் போது மத்திய அரசு கெடுபிடிகளால் பணத்தை வழங்கமுடியாமல் போனதாம்.

இதற்காக தான் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டத்தை வழங்கினார்களாம், 20 ரூபாயை கொடுத்தால் 10,000 ரூபாய் வரை கிடைக்கும் என வாக்காளர்களுக்கு நம்பிக்கையும் தரப்பட்டது.

ஆனால் இன்றுவரை பணம் வராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது, மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து பணத்தை கொடுக்க விடாமல் தடுத்திருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.

இதனாலேயே டிடிவி தினகரன் தொகுதி மக்களை சந்திக்காமல் இருக்கிறாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்