என்னை மன்னித்துவிடுங்கள்: திருமணமான 4 மாதத்தில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் திருமணமாகி 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோதாவரி மாவட்டத்தில் வசித்து வந்த நாகமௌனிகா என்ற பெண்மணி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட இவர், 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் இவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில், அப்பா... அம்மா என்னை மன்னித்து விடுங்கள், எனது கணவருடன் நான் சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை, அவரிடம் இருந்து எனது பணம் மற்றும் பொருட்களை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என எழுதியுள்ளார்.

இப்பெண்ணின் மரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்